போர்நிறுத்தம்! காஸாவில் 300 குழந்தைகள் கொலை! - யூனிசெஃப் அறிவிப்பால் அதிர்ச்சி
காஸாவில் கொல்லப்படும் குழந்தைகள் குறித்து யூனிசெஃப் அமைப்பு தகவல்...
இஸ்ரேல் உடனான போர்நிறுத்தம் அமலில் இருக்கும் 300 நாள்களில் 300 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக யுனிசெஃப் அமைப்பு அறிவித்துள்ளது.
காஸாவில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனக் கிளர்ச்சிப்படையான ஹமாஸ் இடையே 2025 அக்டோபரில் கையெழுத்தான போர்நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த போர் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், காஸாவில் உள்ள மக்கள் குடியிருப்புகள் மற்றும் அகதிகள் முகாம்களைக் குறிவைத்து இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தி வருவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
Advertisement
Advertisement
போர்நிறுத்தம் அமலுக்குக் கொண்டுவரப்பட்ட பிறகு நடத்தப்பட்ட தாக்குதல்களில் மட்டும் காஸாவில் 1,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், போர்நிறுத்தம் கொண்டு வரப்பட்டதில் இருந்து காஸாவில் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு குழந்தையாவது கொல்லப்பட்டு வருவதாக, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளுக்கான யூனிசெஃப் இயக்குநர் எட்வர்ட் பெய்க்பெடர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, இன்று அவர் கூறியதாவது:
“2025 அக்டோபரில் போர்நிறுத்தம் கொண்டுவரப்பட்டதற்குப் பிந்தைய 300 நாள்களில், காஸாவில் குறைந்தது 300 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். அதன்படி, நாளொன்றுக்கு ஒரு குழந்தை கொல்லப்படுகின்றது” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, காஸா மீதான இஸ்ரேலின் போரில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட சுமார் 73,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
UNICEF has announced that 300 children have been killed during the 300 days that the ceasefire with Israel has been in effect.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.