உறவில் விரிசல்! சீனாவில் உள்ள தூதரகத்தை மூடிய இஸ்ரேல்!
சீனாவில் உள்ள துணைத் தூதரகத்தை இஸ்ரேலிய அரசு மூடியுள்ளது குறித்து...
சீனா உடனான நட்புறவில் விரிசல் ஏற்பட்டு வந்த நிலையில், அந்நாட்டிலுள்ள ஒரு துணைத் தூதரகத்தை இஸ்ரேலிய அரசு மூடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிச்சுவான் மாகாணத்தின் செங்டு நகரத்தில் செயல்பட்டு வந்த இஸ்ரேலிய துணைத் தூதரகம் மூடப்பட்டதாக, ஹாங்காங்கைச் சேர்ந்த சீன செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கெனவே, சீனா மற்றும் இஸ்ரேல் இடையேயான உறவில் தொடர்ந்து விரிசல் ஏற்பட்டு வந்தது. இதனிடையே, ஈரான் மற்றும் அரபு நாடுகள் உடனான உறவை மேம்படுத்த சீன அரசு முயன்று வருவதால், இஸ்ரேல் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இருப்பினும், ஷாங்காய், குவான்ஸோ, ஹாங்காங் ஆகிய நகரங்களில் இஸ்ரேலிய துணைத் தூதரகங்களும், பெய்ஜிங்கில் ஒரு தூதரகமும் செயல்பட்டு வருகின்றன. மேலும், சீனாவில் உள்ள தங்களின் தூதரகம் ஒன்றை மூடப்போவதாக இஸ்ரேலிய அரசு அறிவித்திருந்தது. ஆனால், அதற்கான காரணம் எதுவும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.
முன்னதாக, காஸா விவகாரத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததாலும், இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்காததினாலும் சீனா உடனான இஸ்ரேலின் உறவில் விரிசல் உருவானது குறிப்பிடத்தக்கது.
Israel government closed a consulate in China amidst growing strains in their friendly relations.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.