FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சீனாவில் தங்கக் கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி!

சீனாவில் 5 வயது சிறுமி 50 கிராம் தங்கக் கட்டியை விழுங்கிய சிறுமி பற்றி...

21 ஆகஸ்ட் 2026, 6:34 pm IST
தங்கக் கட்டி - கோப்புப்படம்.
பகிர்:

சீனாவில் 5 வயது சிறுமி 50 கிராம் தங்கக் கட்டியை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு சீனாவில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி ஒருவர் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி தங்கக் கட்டியை விழுங்கியுள்ளார். உடனே அந்தச் சிறுமி பெய்ஜிங் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

4 செ.மீ நீளமுள்ள அந்தச் சிறிய தங்கக் கட்டி, சிறுமியின் வயிற்றில் சிக்கியிருப்பதை எக்ஸ்-ரே படம் உறுதிப்படுத்தியது.

Advertisement

Advertisement

பின்னர் எண்டோஸ்கோபி சிகிச்சை மூலம் அந்த 4 செ.மீ நீளப் பட்டையை மருத்துவர்கள் வெற்றிகரமாக வெளியே எடுத்தனர். சிறுமி தற்போது குணமடைந்துள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து இணையதளவாசிகள் பலர் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

அதில் ஒரு பயனர், குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள், சிறிய பொருட்களை எப்போதும் குழந்தைகளிடமிருந்து தள்ளி வைத்திருப்பது நல்லது என்று தெரிவித்துள்ளார்.

summary

A shocking incident has come to light from China, a minor girl swallowed a 50-gram gold bar in northern China.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments