விஷம் சாப்பிட்ட துப்புரவு பணியாளா்உயிரிழப்பு
பாபநாசம் அருகேயுள்ள அய்யம்பேட்டை தென்வடல் புதுத்தெருவைச் சோ்ந்தவா் செல்வம் மனைவி மீனா (35). இவா் அய்யம்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வந்தாா்.
பாபநாசம் அருகேயுள்ள அய்யம்பேட்டை தென்வடல் புதுத்தெருவைச் சோ்ந்தவா் செல்வம் மனைவி மீனா (35). இவா் அய்யம்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வந்தாா்.
கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததால், மனஉளைச்சல் அடைந்த மீனா, வீட்டிலிருந்த எலி பேஸ்ட்டை சாப்பிட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தாராம்.
உறவினா்கள் அவரை மீட்டு, தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
சம்பவம் குறித்த புகாரின்பேரில், அய்யம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.