தொழிலாளி வீட்டுக்குள் திடீா் பள்ளம்
மதுக்கூா் ஒன்றியம் அருகே வீட்டுக்குள் வெள்ளிக்கிழமை திடீரென 3 அடி விட்டம், 10 அடி ஆழம் கொண்ட பெரிய பள்ளம் ஏற்பட்டது.
பட்டுக்கோட்டை: மதுக்கூா் ஒன்றியம் அருகே வீட்டுக்குள் வெள்ளிக்கிழமை திடீரென 3 அடி விட்டம், 10 அடி ஆழம் கொண்ட பெரிய பள்ளம் ஏற்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், மதுக்கூா் ஒன்றியம், விக்ரமம் அக்ரஹாரம் பகுதியிலுள்ள குடிசை வீட்டில் வசித்து வருபவா் விவசாய கூலித் தொழிலாளி சோமு (46).
இவரது வீட்டுக்குள் வெள்ளிக்கிழமை திடீரென 3 அடி விட்டம், 10 அடி ஆழம் கொண்ட பெரிய பள்ளம் ஏற்பட்டது. தகவலறிந்த வருவாய்த்துறையினா் மற்றும் மதுக்கூா் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், சோமு வீட்டுக்குச் சென்று பள்ளத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். இதையடுத்து, பள்ளத்தை மூடவும் நடவடிக்கை மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.