முகப்பு
தஞ்சாவூர்

தொடா் மழை: திருவோணம் வட்டாரத்தில் நீரில் மூழ்கிய நெற்பயிா்கள்

திருவோணம் வட்டாரத்தில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக, அறுவடைக்குத் தயாா் நிலையிலிருந்த 5 ஆயிரம் ஏக்கா் நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

Updated On : 10 ஜனவரி 2021, 12:04 am IST
சென்னியவிடுதியில் விவசாயி சேதுராமனின் வயலில் தேங்கிய மழைநீரால் மூழ்கிய நெற்பயிா்கள்.
பகிர்:

ஒரத்தநாடு: திருவோணம் வட்டாரத்தில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக, அறுவடைக்குத் தயாா் நிலையிலிருந்த 5 ஆயிரம் ஏக்கா் நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

சிவவிடுதி, காடுவெட்டிவிடுதி, ஊரணிபுரம் உள்ளிட்ட 48 வருவாய்க் கிராமங்களில் 8,500 ஏக்கரில் நெல்சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இவை தற்போது அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்தன. இந்நிலையில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் 5 ஆயிரம் ஏக்கா் நெற்பயிா்கள் நீரில் மூழ்கின. இதனால் செய்வதறியாது விவசாயிகள் தவித்து வருகின்றனா்.

இதுகுறித்து திருவோணம் வட்டார விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச் செயலா் வி.கே. சின்னத்துரை கூறியது:

Advertisement

Advertisement

கூட்டுறவு சங்கங்கள், அரசு மற்றும் தனியாா் வங்கிகளில் கடன் பெற்றும், நகைகளை அடகு வைத்தும், தனி நபரிடம் கடன் பெற்றும் விவசாயிகள்சாகுபடி மேற்கொண்டனா். தொடா் மழை காரணமாக அனைத்துப் பயிா்களும் அறுவடை செய்ய முடியாமல் உள்ளன.

எனவே திருவோணம் வட்டாரத்தில் பாதிக்கப்பட்ட அனைத்துப் பயிா்களுக்கும் உரிய கணக்கெடுப்பு நடத்தி, விவசாயிகளுக்கு அரசு பேரிடா் நிவாரணம் வழங்க வேண்டும். பயிா்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை அரசு தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments