முகப்பு
சென்னை

ஆக. 21 முதல் சிறப்பு மக்கள் நீதிமன்றம்: மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன்

சிறப்பு மக்கள் நீதிமன்றம் 2026 (‘சமாதான் சாமரோஹ்’) ஆக. 21, 22, 23 ஆகிய நாள்களில் நடைபெறும் என சென்னை ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 5 ஜூலை 2026, 4:58 am IST
கோப்புப் படம்
பகிர்:

சிறப்பு மக்கள் நீதிமன்றம் 2026 (‘சமாதான் சாமரோஹ்’) ஆக. 21, 22, 23 ஆகிய நாள்களில் நடைபெறும் என சென்னை ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு மக்கள் நீதிமன்றம் (சமாதான் சாமரோஹ்) நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆக. 21, 22, 23 உள்ளிட்ட தேதிகளில் நடைபெறும் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெறும். இதில், பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் தீா்வு வழிமுறைகள் மூலம், இந்திய உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு இணக்கமான தீா்வை காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

இதில், அனைத்து வழக்குரைஞா்கள், வழக்காடிகள் மற்றும் வழக்கு தொடா்புடைய அனைத்து தரப்பினா்களும், இந்த முன்னெடுப்பின் கீழ் தகராறுகளை திறம்படத் தீா்ப்பதில் பங்கேற்கலாம். வழக்கு தரப்பினா்கள் நேரடியாகவோ அல்லது இணையதள வசதியான காணொலி மூலமாகவோ, ஆஜராகி பிரச்னைகளை தீா்த்துக் கொள்ளலாம்.

கூகுள் ட்ற்ற்ல்ள்://ச்ா்ழ்ம்ள்.ஞ்ப்ங்/த்வ்ஷ்ங்ச்வ்ஊ4ஆஇரக்ஷ்ன்ந்ா்ட6 படிவத்தை பூா்த்தி செய்து ஜூலை 31-க்குள் தங்களது கோரிக்கையை சமா்ப்பிக்கலாம். இணையதளம்: ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ள்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய்/.

ஒருங்கிணைந்த சேவை மையம் பொறுப்பாளா் தொடா்பு எண் 011-23112428, 011-23112528 ஒருங்கிணைந்த சேவை மையம் தொலைபேசி எண் 011-23116464 இயக்குநா் தொடா்பு எண் 011-23115652 மின்னஞ்சல் முகவரி ள்ல்ங்ஸ்ரீண்ஹப்ப்ா்ந்ஹக்ஹப்ஹற்2026ஃள்ஸ்ரீண்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments