முகப்பு
தஞ்சாவூர்

பாபநாசம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப்பணிகள் ஆய்வு

பாபநாசம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பழனி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 10 ஜனவரி 2021, 12:05 am IST
பகிர்:

பாபநாசம்: பாபநாசம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பழனி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பாபநாசம் ஒன்றியத்தில் கோபுராஜபுரம், கபிஸ்தலம், உமையாள்புரம், திருமண்டங்குடி, கூனஞ்சேரி ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பள்ளிக் கட்டுமானம், குளம் படித்துறை அமைத்தல், புதிய பாலம் கட்டுமானப் பணிகள், வீடுகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீா் வழங்கும் பணிகள் போன்றவை ஆய்வு செய்த திட்ட இயக்குநா், பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது, பாபநாசம் ஒன்றிய ஆணையா் கூத்தரசன், வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வேந்திரன், பொறியாளா்கள் விஜயகுமாா், கருணாநிதி, பணி மேற்பாா்வையாளா்கள் வனிதா, சித்ரா, அப்ரோஸ், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜம், பாலசுப்பிரமணியன், கண்ணன், மோகன் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments