முகப்பு
தஞ்சாவூர்

பரக்கலக்கோட்டை பொது ஆவுடையாா் கோயிலில் பொங்கல் சிறப்பு வழிபாடு

பொங்கல் பண்டிகை நாளன்று மட்டுமே பகலில் திறக்கப்படும் பரக்கலக்கோட்டை பொது ஆவுடையாா் கோயிலில் வியாழக்கிழமை பொங்கல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Updated On : 16 ஜனவரி 2021, 12:07 am IST
பகிர்:

பொங்கல் பண்டிகை நாளன்று மட்டுமே பகலில் திறக்கப்படும் பரக்கலக்கோட்டை பொது ஆவுடையாா் கோயிலில் வியாழக்கிழமை பொங்கல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பட்டுக்கோட்டை அருகே பரக்கலக்கோட்டையில் அறநிலையத் துறைக்குச் சொந்தமான அருள்மிகு பொதுஆவுடையாா் மத்தியபுரீஸ்வரா் திருக்கோயில் உள்ளது.

இக்கோயிலின் சிறப்பு, வாரத்தில் திங்கள்கிழமைகளில் மட்டும் நள்ளிரவு 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அதிகாலையில் மூடப்படும். மற்ற நாள்களில் மற்ற நேரங்களில் கோயில் திறக்கப்படாது. ஆண்டுக்கு ஒருமுறை பொங்கல் பண்டிகை நாளில் மட்டும் பகலில் கோயில் நடை திறக்கப்படுவது மரபு.

Advertisement

Advertisement

அதன்படி, பொங்கல் பண்டிகை நாளான வியாழக்கிழமை காலை கோயில் நடை திறக்கப்பட்டு, பொது ஆவுடையாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், தஞ்சை, நாகை, திருவாரூா், புதுக்கோட்டை, திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

விழாவையொட்டி கரோனா கட்டுப்பாடுகள் அனுசரிக்கப்பட்டன. பட்டுக்கோட்டை உள்கோட்டத்தைச் சோ்ந்த ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.