ஜன.11ல் திமுக செயற்குழு கூட்டம்
தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் பாவூா்சத்திரத்தில் திங்கள்கிழமை (ஜன.11) நடைபெறுகிறது.
பாவூா்சத்திரம்: தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் பாவூா்சத்திரத்தில் திங்கள்கிழமை (ஜன.11) நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட பொறுப்பாளா் வழக்குரைஞா் பொ.சிவபத்மநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு பாவூா்சத்திரத்தில் முன்னாள் அமைச்சா் ச.தங்கவேலு தலைமையில் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி திமுக கொடியேற்று விழா, விளையாட்டு போட்டிகள் நடத்துவது தொடா்பாக ஆலோசிக்கப்படவுள்ளது. எனவே மாநில, மாவட்ட நிா்வாகிகள், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய ,நகர, பேரூா் கழக செயலா்கள்,மாவட்ட அணி அமைப்பாளா்கள் கலந்து கொள்ளும்படி அதில் கேட்டுக்கொண்டுள்ளாா்.