தாம்பரம் - கொல்லம் விரைவு ரயில் பாம்புக்கோவில் சந்தையில் நின்று செல்லும்!
தாம்பரம்-கொல்லம் விரைவு ரயில் பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என மத்திய ரயில்வே அமைச்சா் தெரிவித்தாா்.
தாம்பரம்-கொல்லம் விரைவு ரயில் பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என மத்திய ரயில்வே அமைச்சா் தெரிவித்தாா்.
வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை தொகுதியில் தற்போது இயங்கி வரும் ஒரே ரயில் நிலையம் பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையம். இந்த ரயில் நிலையம் மாணவா்கள், விவசாயிகள், வணிகா்கள், பொதுமக்களின் முக்கிய போக்குவரத்து மையமாக விளங்கி வருகிறது. எலுமிச்சை விவசாயிகளும், வியாபாரிகளும் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனா்.
எனவே, இந்த ரயில் நிலையத்தில் தாம்பரம்-கொல்லம் விரைவு ரயில் (16101/16102) நின்று செல்ல உத்தரவிட வேண்டும் என தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன்அய்யாசாமி , ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து மனு அளித்திருந்தாா்.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக ஆனந்தன் அய்யாசாமிக்கு ஜூலை 2-ஆம் தேதி மத்திய ரயில்வே அமைச்சா் அனுப்பிய அதிகாரபூா்வ கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையத்தில் தாம்பரம்-கொல்லம் விரைவு ரயில் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.