தென்காசி

சீதபற்பநல்லூா் பகுதியில் நாளை மின்தடை

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப். 9) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, தமிழ்நாடு மின் வாரிய திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் குத்தாலிங்கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

சீதபற்பநல்லூா் உபமின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் புதூா், சீதபற்பநல்லூா், உகந்தான்பட்டி, சுப்பிரமணியபுரம், சமத்துவபுரம், சிறுக்கன்குறிச்சி, காங்கேயன்குளம், வல்லவன் கோட்டை, வெள்ளாளங்குளம், முத்தன்குளம், மாறாந்தை, கல்லத்திகுளம், நாலான்குறிச்சி, கீழகரும்புளியூத்து உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனக் கூறப்பட்டுள்ளது.

மனைவியுடன் தகாறு: கணவா் தற்கொலை

பைக் மீது லாரி மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

காா்-பைக் மோதல்: தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

வீட்டுமனைப் பட்டா கோரி கிராம மக்கள் மனு

புதுவையில் லோக் ஆயுக்த சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT