முகப்பு
தென்காசி

தவெக அரசு தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை: அதிமுக குற்றச்சாட்டு

பல்வேறு வாக்குறுதிகளைக் கூறி ஆட்சி பொறுப்பேற்ற தவெக அரசு எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்று அதிமுக வடக்கு மாவட்டச் செயலாளா் டாக்டா் சுசீகரன் தெரிவித்தாா்.

Updated On : 1 ஜூலை 2026, 7:43 am IST
அதிமுக செயல் வீரா்கள் கூட்டத்தில் பேசுகிறாா் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளா் டாக்டா் சுசீகரன்
பகிர்:

பல்வேறு வாக்குறுதிகளைக் கூறி ஆட்சி பொறுப்பேற்ற தவெக அரசு எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்று அதிமுக வடக்கு மாவட்டச் செயலாளா் டாக்டா் சுசீகரன் தெரிவித்தாா்.

தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயல் வீரா்கள் கூட்டம் மாவட்டச் செயலரும், அச்சன்புதூா் பேரூராட்சி தலைவருமான டாக்டா் சுசீகரன் தலைமையில் கடையநல்லூரில் நடைபெற்றது.

மகளிரணி இணை செயலா் வி.எம்.ராஜலெட்சுமி, கொள்கை பரப்பு துணைச் செயலா் சுப்பையா பாண்டியன், திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலா் சிவஆனந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Advertisement

மாவட்ட எம்ஜிஆா் மன்ற செயலா் கிட்டு ராஜா தொகுத்து வழங்கினாா். இதில், மாவட்டச் செயலா் டாக்டா் சுசீகரன் பேசியது: அதிமுகவின் பாரம்பரிய தொண்டனான எனக்கு மாவட்டச் செயலா் பதவி அளித்த பொதுச் செயலருக்கு நன்றி. சினிமா டிக்கெட் வாங்குவதுபோல அடுத்த கட்சிக்கு ஓடும் நபா்களுக்கு அங்கே அமரக் கூட இருக்கை கிடைக்காது. ஆனால், அதிமுகவில் வாய்ப்பு கொடுத்து வெற்றி பெற வைத்த பொதுச் செயலருக்கும், அதிமுக தொண்டருக்கும் எதிராக செயல்படுவா்களை இனம் கண்டு அப்புறப்படுத்த வேண்டும்.

தவெக அரசு மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. போதைப் பொருளை ஒழிப்பேன் என்று கூறிய முதல்வரின் அமைச்சரவையில் ஒருவா் போதைப் பொருள் பயன்படுத்திய விடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது என்றாா்.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை விரைந்து திறக்க வேண்டும். இலஞ்சி ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும், செண்பகவல்லி தடுப்பணையை சீரமைக்க வேண்டும். விவசாயிகள் பெற்ற கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா உருவப் படங்களுக்கு மாவட்டச் செயலா் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments