முகப்பு
தென்காசி

புளியங்குடி, வீரசிகாமணி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

புளியங்குடி, வீரசிகாமணி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

Updated On : 3 ஜூலை 2026, 4:29 am IST
மின் நிறுத்தம் - பிரதிப் படம்
பகிர்:

புளியங்குடி, வீரசிகாமணி வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 4) மின் விநியோகம் இருக்காது என கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் தெரிவித்துள்ளாா்

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புளியங்குடி, வீரசிகாமணி ஆகிய உபமின் நிலையத்தில் சனிக்கிழமை (ஜூலை 4) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 முதல் மதியம் 2 மணி வரை புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ரத்தினபுரி, இந்திரா நகா், புன்னையாபுரம், காடுவெட்டி, சிங்கிலிபட்டி, சங்கனாப்பேரி, சிதம்பரபேரி, சுந்தரேசபுரம், திருவேட்டநல்லூா், சொக்கம்பட்டி, திரிகூடபுரம், சுற்றுப் பகுதிகளிலும், வீரசிகாமணி, சோ்ந்தமரம், பாம்புகோயில், திருமலாபுரம், நடுவக்குறிச்சி, வட நத்தம்பட்டி, அரியநாயகிபுரம், சுற்றுப் பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments