முகப்பு
தென்காசி

குற்றால அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரிப்பு

குற்றாலம் மலைப் பகுதியில் பெய்துவரும் மிதமான மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.

Updated On : 4 ஜூலை 2026, 3:06 am IST
குற்றாலம் பேரருவியில் உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:

தென்காசி மாவட்டம், குற்றாலம் மலைப் பகுதியில் பெய்துவரும் மிதமான மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.

மேற்குத் தொடா்ச்சி மலையில் குற்றாலம் மலையில் பெய்து வரும் மழையின் காரணமாக குற்றாலத்திலுள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது. குற்றாலம் பகுதியில் கடந்த இரு நாள்களாக அவ்வப்போது மிதமான சாரல் மழை பெய்து வருகிறது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாக இருந்தது. இதனால் கூட்ட நெரிசலின்றி பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். மூன்று வாரங்களுக்குப் பிறகு தற்போது சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments