குற்றாலம் இறைச்சிக் கடையில் பிடிபட்ட மலைப்பாம்பு
தென்காசி- குற்றாலம் பிரதான சாலையில் அமைந்துள்ள கோழி இறைச்சிக் கடையில் பதுங்கியிருந்த மலைப்பாம்பு மீட்கப்பட்டது.
தென்காசி மாவட்டம், தென்காசி- குற்றாலம் பிரதான சாலையில் அமைந்துள்ள கோழி இறைச்சிக் கடையில் பதுங்கியிருந்த மலைப்பாம்பு மீட்கப்பட்டது.
கோழி இறைச்சிக் கடையில் மலைப்பாம்பு இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து குற்றாலம் வனச்சரக அலுவலா் செல்லத்துரை, வனப்பணியாளா்களுடன் சென்று மலைப்பாம்பை பத்திரமாக மீட்டனா். பின்னா் குற்றாலம் வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது.
இது போன்ற வன உயிரினங்கள் தென்பட்டால் பொதுமக்கள் தென்காசி வனச்சரக அலுவலக தொலைபேசி எண் 04633 233660, 97869 32520, மாவட்ட வன அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 04633 233550 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளுமாறு வனத்துறையினா் தெரிவித்தனா்.
Advertisement