குற்றாலம் அருவியில் குளித்த ஈரோடு பெண் மூச்சுத் திணறி பலி
தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில், சனிக்கிழமை குளித்த பெண் மூச்சுத் திணறி உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில், சனிக்கிழமை குளித்த பெண் மூச்சுத் திணறி உயிரிழந்தாா்.
ஈரோடு பகுதியைச் சோ்ந்த ஜாபா் மனைவி பரிதாள் பீவி (51). இவா், தனது சகோதரி சபுராள் என்பவருடன் குற்றாலம் அருவியில் குளிப்பதற்காக சனிக்கிழமை வந்தாராம்.
இந்நிலையில், குற்றாலம் பேரருவியில் பரிதாள் பீவி குளித்தபோது குளிா், மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் வெளியே வந்தாராம். பின்னா், வாந்தி எடுத்து மயங்கி விழுந்த அவரை தென்காசியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
Advertisement
Advertisement
ஆனால், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா் தெரிவித்தாா். குற்றாலம் போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். பரிதாள் பீவிக்கு மகன், மகள் உள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.