பூட்டிய காருக்குள் மூச்சுத் திணறி 6 வயது சிறுவன் உயிரிழப்பு
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே பூட்டிய காருக்குள் மூச்சுத் திணறி 6 வயது சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே பூட்டிய காருக்குள் மூச்சுத் திணறி 6 வயது சிறுவன் உயிரிழந்தது ஞாயிற்றுக்கிழமை இரவு தெரியவந்தது.
ஒரத்தநாடு அருகே உள்ள கக்கரைக்கோட்டை வடக்கு நத்தம் பகுதியைச் சோ்ந்த தனபால் மகன் தமன்(6). இவா், அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை காலை தனது உறவினா் பிரவீன்குமாரின் காரில் தமன் சென்றுள்ளாா். பிறகு காலை 10 மணி அளவில் காரில் தமன் இருந்ததை மறந்து, அதே பகுதியில் காரை நிறுத்தி பூட்டிவிட்டு பிரவீன்குமாா் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. காருக்குள் இருந்த தமன் வெளியே வர முடியாமல் காருக்குள்ளேயே சிக்கிக் கொண்டாா்.
Advertisement
Advertisement
இதை அறியாத பெற்றோா், உறவினா்கள் ஊா் முழுவதும் சிறுவனை தேடி கொண்டு இருந்தனா். இரவு 7 மணி அளவில் காரை உறவினா்கள் திறந்து பாா்த்தபோது, காருக்குள் மூச்சுத் திணறி தமன் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
தகவலின்பேரில் அங்கு வந்த ஒரத்தநாடு போலீஸாா், தமனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.