வாழையில் தண்டு துளைப்பான் பாதிப்பை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு பயிற்ச
உத்தமபாளையம் அருகே கோகிலாபுரத்தில், வாழையில் தண்டு துளைப்பான் பாதிப்பை ஊசி மூலம் மருந்தை உட்செலுத்தி கட்டுப்படுத்தும் முறை குறித்து பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் விவசாயிகளுக்கு செயல் விளக்கப் பயிற்சி அளித்தனர்.
உத்தமபாளையம் அருகே கோகிலாபுரத்தில், வாழையில் தண்டு துளைப்பான் பாதிப்பை ஊசி மூலம் மருந்தை உட்செலுத்தி கட்டுப்படுத்தும் முறை குறித்து பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் விவசாயிகளுக்கு செயல் விளக்கப் பயிற்சி அளித்தனர்.
உத்தமபாளையம் ஒன்றியத்தில் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசியர்கள் விஜயசாமுண்டீஸ்வரி, உஷாராணி ஆகியோர் தலைமையில் மாணவிகள் பூங்குழலி, பிரதீபா, பிரீத்தி, புஷ்பலதா, ராகப்பிரியா, ராஜகாளீஸ்வரி, ரம்யா, ரோஜா ஆகியோர் முகாமிட்டு விசாயிகளுக்கு வேளாண்மை விரிவாக்கப் பணிகள் குறித்து பயிற்சி அளித்து வருகின்றனர். கோகிலாபுரத்தில் வாழையில் தண்டு துளைப்பான் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு, 150 மில்லி மோனோகுரோட்டோபாûஸ 350 மில்லி தண்ணீரில் கலந்து, ஒரு மரத்துக்கு 5 மில்லி எடுத்து, ஊசி மூலம் உட்செலுத்தி கட்டுப்படுத்தும் முறை குறித்து விசாயிகளுக்கு மாணவிகள் பயிற்சி அளித்தனர். வாழை குலைதள்ளும் பருவத்தில் ஊசி மூலம் மருந்து உட்செலுத்தும் முறையை கையாளக் கூடாது என்று விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.