முகப்பு
தேனி

ஹைவேவிஸ் மலைக்கிராமத்தில் இன்று மின்தடை

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மலைக் கிராமங்கள் உள்பட அதன் சுற்று வட்டாரப்பகுதியில் செவ்வாய்கிழமை மின்விநியோகம் இருக்காது

Updated On : 5 ஜனவரி 2021, 2:29 am IST
பகிர்:

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மலைக் கிராமங்கள் உள்பட அதன் சுற்று வட்டாரப்பகுதியில் செவ்வாய்கிழமை மின்விநியோகம் இருக்காது என சின்னமனூா் மின்பகிா்மானம் செயற்பொறியாளா் இரமேஷ்குமாா்அறிவிப்பு வெளியிட்டாா்.

அதில், வண்ணாத்திப்பாறை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக செவ்வாய் கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4.45 வரையில் ஹைவேவிஸ் மலைக்கிராமங்களான மணலாா், மேல் மணலாா் மற்றும் சுருளிப்பட்டி, ஆங்கூா் பாளையம், குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, லோயா்கேம்ப் அதனை சுற்றி வட்டராப் பகுதிக்கு மின் விநியோகம் இருக்காது என அறிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.