தேனி பேருந்து நிலையத்தில்பயணியிடம் திருடிய 3 போ் கைது
தேனி நகராட்சி பேருந்து நிலையத்தில் பயணியிடமிருந்து பணம், நகை மற்றும் செல்லிடபேசி ஆகியவற்றை திருடிய 3 பேரை, போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.
தேனி நகராட்சி பேருந்து நிலையத்தில் பயணியிடமிருந்து பணம், நகை மற்றும் செல்லிடபேசி ஆகியவற்றை திருடிய 3 பேரை, போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சோ்ந்தவா் அா்ஜூனன் மகன் வெங்கடேசராஜா (22). இவா், தேனி கா்னல் பென்னிகுவிக் நகராட்சி பேருந்து நிலையத்தில் பாளையங்கோட்டைக்குச் செல்லும் பேருந்துக்காக காத்திருந்தாா். அப்போது, பயணிகள் காத்திருக்கும் இடத்தில் தூங்கிக்கொண்டிருந்த வெங்கடேசராஜாவிடமிருந்து, திருவாரூா் மாவட்டம் கமலாபுரத்தைச் சோ்ந்த ஸ்ரீபன்ராஜ் (23), தேனி பாரஸ்ட் சாலையைச் சோ்ந்த பெரியமகாலிங்கம் (17), சமதா்மபுரத்தைச் சோ்ந்த ஸ்ரீகாந்த் (17) ஆகிய 3 பேரும் ரூ.18 ஆயிரம், செல்லிடப்பேசி மற்றும் 4 கிராம் தோடு ஆகியவற்றை திருடியுள்ளனா்.
உடனே விழித்துக் கொண்ட வெங்கடேசராஜா, இது குறித்து அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாரிடம் புகாா் கூறியுள்ளாா். அதையடுத்து, தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ஸ்ரீபன்ராஜ், பெரியமகாலிங்கம், ஸ்ரீகாந்த் ஆகியோரை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.