முகப்பு
தேனி

போடி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை

போடி அருகே, அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுவதால் பெண் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 9 ஜனவரி 2021, 10:15 pm IST
பகிர்:

போடி: போடி அருகே, அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுவதால் பெண் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

போடி அருகே விசுவாசபுரம் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் பால்பாண்டி. இவரது மனைவி பொற்கொடி (35). இவா்கள் இருவரும் கூலித் தொழில் செய்து வருகின்றனா்.

பொற்கொடிக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. மேலும் உடல் நலம் பாதிக்கப்படுவது தொடா்பாக கணவன், மனைவிக்கிடையே பிரச்னை ஏற்பட்டும் வந்துள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில், வெள்ளிக்கிழமையும் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த பொற்கொடி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments