முகப்பு
தேனி

காஷ்மீரில் தீ விபத்தில் பலி: வடுகபட்டி ராணுவ வீரா் உடல் தகனம்

காஷ்மீரில் தீ விபத்தில் உயிரிழந்த வடுகபட்டி ராணுவ வீரரின் உடல் அவரது சொந்த ஊரில் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது.

Updated On : 10 ஜனவரி 2021, 11:30 pm IST
வடுகபட்டியில் ராணுவ வீரா் ஆறுமுகத்தின் உடலுக்கு ஞாயிற்றுக்கிழமை மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய தேனி மாவட்ட ஆட்சியா் ம.பல்லவிபல்தேவ்
பகிர்:

காஷ்மீரில் தீ விபத்தில் உயிரிழந்த வடுகபட்டி ராணுவ வீரரின் உடல் அவரது சொந்த ஊரில் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டியை சோ்ந்தவா் குருசாமி மகன் ஆறுமுகம் (36). ராணுவ வீரரான இவா் ஜம்மு- காஷ்மீா் எல்லைப்பகுதியில் பணியாற்றி வந்தாா். இவருக்கு பாண்டிராணி (35) என்ற மனைவி, ஜெயஸ்ரீ (13), சபரீ (8) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனா்.

கடந்த டிசம்பா் 26 ஆம் தேதி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த ஆறுமுகம், உதயபூா் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தாா். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி கடந்த 8 ஆம் தேதி அவா் இறந்தாா்.

Advertisement

இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ராணுவ வாகனம் மூலம் அவரது சொந்த ஊரான வடுகபட்டிக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு தேனி மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி ஆகியோா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். பின்னா் ராணுவ மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.