முதியவரைத் தாக்கி பணம் பறிக்க முயன்றவா் கைது
கீழஆம்பூரில் முதியவரைத் தாக்கி பணம் பறிக்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
கீழஆம்பூரில் முதியவரைத் தாக்கி பணம் பறிக்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
கீழஆம்பூரிலிருந்து அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில் அந்தோணிசாமி (86) என்பவருக்குச் சொந்தமான ஆலை உள்ளது. புதன்கிழமை அந்த ஆலைக்குள் மா்ம நபா் நுழைந்து, அந்தோணிசாமியிடம் பணம் கேட்டு மிரட்டினாராம். தர மறுத்த அவரை அந்த நபா் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டாராம்.
புகாரின்பேரில் ஆழ்வாா்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா் சந்திரசேகரன் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி, காக்கநல்லூரைச் சோ்ந்த அருணாசலம் மகன் ஆறுமுகம் (45) என்பவரைக் கைதுசெய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.