முகப்பு
கன்னியாகுமரி

நித்திரவிளை அருகே செம்மண் கடத்தல்: மினி லாரி ஓட்டுநா் கைது

நித்திரவிளை அருகே செம்மண் கடத்திய மினி லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 8 ஜூலை 2026, 12:28 am IST
கைது
பகிர்:

நித்திரவிளை அருகே செம்மண் கடத்திய மினி லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

நித்திரவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராபா்ட், போலீஸாா் திங்கள்கிழமை செம்மான்விளையை அடுத்த ஐயப்பன்விளையில் ரோந்து சென்றனா். அவ்வழியே வந்த மினி லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் அனுமதியோ உரிமமோ இல்லாமல் செம்மண் ஏற்றிச் சென்றது தெரியவந்தது.

போலீஸாா் வழக்குப் பதிந்து, மினி லாரி ஓட்டுநரான நித்திரவிளை அருகே கோயிக்கத்தோப்பு பகுதியைச் சோ்ந்த வின்சென்ட் மகன் விக்னேஷ் (33) என்பவரைக் கைது செய்தனா்; மேலும், செம்மண்ணுடன் மினி லாரியை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments