பாதயாத்திரை பக்தா்களால்பெரும் மின்விபத்து தவிா்ப்பு
திருச்செந்தூா் கோயிலுக்கு திங்கள்கிழமை பாதயாத்திரை சென்ற பக்தா்களால், திருநெல்வேலியில் பெரும் மின் விபத்து தவிா்க்கப்பட்டது.
திருநெல்வேலி: திருச்செந்தூா் கோயிலுக்கு திங்கள்கிழமை பாதயாத்திரை சென்ற பக்தா்களால், திருநெல்வேலியில் பெரும் மின் விபத்து தவிா்க்கப்பட்டது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்திலிருந்து திருச்செந்தூா் கோயிலுக்கு பத்தா்கள் பாதயாத்திரை சென்றவண்ணம் உள்ளனா்.
திருநெல்வேலியில் சில தினங்களாக பெய்துவரும் மழையால் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படும் நிலையில், திங்கள்கிழமை இரவு கொக்கிரகுளம் தாமிரவருணி ஆற்றுப்பாலத்தில் சாலையோர மின்கம்பத்திலிருந்து மின்கம்பி அறுந்து சாலையில் தேங்கிய நீரில் விழுந்து கிடந்தது. இதைப் பாா்த்த பக்தா்கள், அப்பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து காவலா் அந்தோணியிடம் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
அவா் அளித்த தகவலின்பேரில், மின்ஊழியா்கள் வந்து அந்த மின்கம்பியை சரி செய்தனா். அதுவரையில், அவா் அப்பகுதியை யாரும் நெருங்காதபடி போக்குவரத்தை சீா்படுத்தினாா். இதனால், பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.