மாநகராட்சியில் 3 நாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தம்
தாமிரவருணி வெள்ளம் காரணமாக திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் 3 நாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
தாமிரவருணி வெள்ளம் காரணமாக திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் 3 நாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் கனமழையால், பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து பெருமளவில் உபரிநீா் திறந்து விடப்பட்டுள்ளதால் தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் உட்புறம் உள்ள தண்ணீா் ஏற்றும் கிணறுகள் அனைத்தும் மூழ்கியுள்ளன.
மாநகராட்சி அனைத்து பகுதிகளுக்கும் குடிநீா் விநியோகம் செய்யும் தலைமை நீரேற்று நிலையங்களில் மின்மோட்டாா்களை இயக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மாநகராட்சியின் அனைத்து வாா்டு பகுதிகளுக்கு வியாழக்கிழமை (ஜன. 14) முதல் இம் மாதம் 16 ஆம் தேதி வரை 3 நாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது. பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாக பயன்படுத்துவதோடு, குடிநீரை கொதிக்க வைத்து பருக வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.