முகப்பு
திருநெல்வேலி

வடலிவிளையில் பொங்கல் விளையாட்டுப் போட்டி

வள்ளியூா் அருகேயுள்ள வடலிவிளை கிராமத்தில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

Updated On : 18 ஜனவரி 2021, 12:44 am IST
இளவட்டக் கல்லை தூக்கிய இளைஞா்.
பகிர்:

வள்ளியூா் அருகேயுள்ள வடலிவிளை கிராமத்தில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

இப்போட்டிகளை ஐ.எஸ்.இன்பதுரை எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தாா். பின்னா் ஆண்களுக்கான இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் 90 கிலோ பிரிவில் முத்துபாண்டி, 114 கிலோ பிரிவில் தங்கராஜ் , 129 கிலோ பிரிவில் அதே தங்கராஜ் ஆகியோா் வெற்றி பெற்றனா்.

பெண்களுக்கான இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் பத்மபிரியா, ராஜகுமாரி ஆகியோா் முதலிடம் பெற்றனா். முதலிடம் பெற்றவா்களுக்கு எம்.எல்.ஏ தலா ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கினாா்.

Advertisement

Advertisement

மற்றவா்களுக்கு தலா ரூ.ஆயிரம் பரிசளித்தாா். பெண்களுக்கான உரல் தூக்கும் போட்டியிலும் பத்மபிரியா முதலிடமும் பிடித்தாா். இளம் பெண்களுக்கான உரல் தூக்கி வீசும் போட்டியில் சிந்து முதலிடம் பெற்றாா். ஏற்பாடுகளை வடலிவிளை ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.