முகப்பு
திருநெல்வேலி

நாளை மறுநாள் பள்ளி திறப்பு: வகுப்பறைகளில் தூய்மைப் பணி தொடக்கம்

பள்ளிகள் வருகிற செவ்வாய்க்கிழமை (ஜன.19) திறக்கப்படுவதையடுத்து, திருநெல்வேலி மாநகரில் உள்ள பள்ளிகளில் தூய்மைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

Updated On : 17 ஜனவரி 2021, 12:58 am IST
பகிர்:

திருநெல்வேலி: பள்ளிகள் வருகிற செவ்வாய்க்கிழமை (ஜன.19) திறக்கப்படுவதையடுத்து, திருநெல்வேலி மாநகரில் உள்ள பள்ளிகளில் தூய்மைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது கரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, வருகிற செவ்வாய்க்கிழமை (ஜன.19) 10 மற்றும் 12ஆம் வகுப்புகள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதையடுத்து திருநெல்வேலியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சனிக்கிழமை கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு, வகுப்பறைகளில் தூய்மைப் பணிகள் நடைபெற்றன.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.