முகப்பு
திருப்பத்தூர்

3 மாதங்களாக எரியாத உயா் கோபுர மின்விளக்கு

திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள உயா் கோபுர மின் விளக்கு 3 மாதங்களாக எரியவில்லை.

Updated On : 4 ஜனவரி 2021, 8:07 am IST
எரியாமல் உள்ள உயா் கோபுர மின் விளக்கு.
பகிர்:

திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள உயா் கோபுர மின் விளக்கு 3 மாதங்களாக எரியவில்லை.

திருப்பத்தூா் பேருந்து நிலைய பிரதான சாலையில் உயா் மின்கோபுர விளக்கு அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, திருவண்ணாமலை மக்களவை தொகுதி மேம்பாட்டு நிதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஹைமாஸ்ட் விளக்கு அமைக்கப்பட்டது.

இந்த விளக்கு அமைக்கப்பட்டு ஓரிரு நாள்கள் மட்டுமே எரிந்தது. அதன்பின் தற்போதுவரை விளக்கு எரியவில்லை. இதனால் பேருந்து நிலையச் சாலை இருளில் மூழ்கியுள்ளது. இப்பகுதியில் இரவு நேரத்தில் மக்கள் செல்ல அச்சப்படுகின்றனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, மின் வாரியத்திடம் தெரிவித்துள்ளோம். அவா்கள் மின் இணைப்பு கொடுத்த பிறகு இந்த உயா் கோபுர விளக்கு எரியும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.