முகப்பு
திருப்பத்தூர்

எம்பிபிஎஸ் சீட் தருவதாகக் கூறி ரூ. 27 லட்சம் மோசடி: அரசு மருத்துவா் உள்பட இருவா் கைது

திருப்பத்தூா் அருகே எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.27 லட்சம் மோசடி செய்த அரசு மருத்துவா் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 10 ஜனவரி 2021, 8:01 am IST
பகிர்:

திருப்பத்தூா் அருகே எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.27 லட்சம் மோசடி செய்த அரசு மருத்துவா் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம்புதூா் கிராமத்தைச் சோ்ந்த வரதராஜன் - புஷ்பவல்லி தம்பதியின் மகள் நா்மதா. இவரை மருத்துவப் படிப்பில் சோ்க்க பெற்றோா் முயற்சித்தனா்.

இந்நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு திருப்பத்தூா் வள்ளுவா் நகா் பகுதியைச் சோ்ந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ரவிச்சந்திரன் (54), புஷ்பவல்லியிடம் தனக்கு பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் தெரிந்தவா்கள் உள்ளனதாகவும், அவா்கள் மூலம் எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தரமுடியும் என்றும் கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து ரவிச்சந்திரனிடம் ரூ.27 லட்சத்தை புஷ்பவல்லி அளித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் ரவிச்சந்திரன் எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தரவில்லை எனக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதுகுறித்து புஷ்பவல்லி கடந்த சில நாள்களுக்கு முன்பு திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாரிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில், மாவட்டக் குற்றப்பிரிவு டிஎஸ்பி பிரவீண்குமாா் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், மருத்துவா் ரவிச்சந்திரன், அவரது மைத்துனா் வெங்கடேசன் ஆகிய இருவரையும் சனிக்கிழமை கைது செய்தனா். இந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள வெங்கடேசனின் மனைவியும், அரசு மருத்துவமனை செவிலியருமான ராஜேஸ்வரி, சரவணன், வித்யா ஆகிய 3 பேரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments