ராகவா லாரன்ஸின் 30-வது திரைப்படம்! சாய் அபயங்கர் இசை!
நடிகர் ராகவா லாரன்ஸின் 30-வது திரைப்படம் குறித்து...
நடிகர் ராகவா லாரன்ஸின் 30-வது திரைப்படம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
நடன இயக்குநராக தமிழ் சினிமாவில் கவனம் பெற்று பின் நடிகராகவும் நல்ல இடத்தைப் பிடித்தவர் ராகவா லாரன்ஸ். பல படங்களில் துணை நடிகராக நடித்து, நாயகனாகியும் தனக்கான வரவேற்பைப் பெற்றார்.
ராகவா லாரன்ஸின் பெரிய வெற்றிப்படமாக முனி அமைய, தொடர்ந்து காஞ்சனா, காஞ்சனா - 2 ஆகிய படங்கள் வணிக ரீதியாகவும் லாரன்ஸின் மார்க்கெட்டை உயர்த்தியது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் சிறந்த நடிப்பைக் கொடுத்திருந்தார். தற்போது, காஞ்சனா - 4 படத்தை இயக்கி வருகிறார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ராகவா லாரன்ஸ் தன் 30-வது திரைப்படத்தைத் தயாரித்து இயக்கவுள்ள அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
An announcement has been made regarding actor Raghava Lawrence's 30th film.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.