முகப்பு
திருப்பத்தூர்

பாஜக கொடிக் கம்பம் அகற்றம்

ஆம்பூரில் பாஜகவினா் அனுமதியின்றி அமைத்த கொடிக் கம்பத்தை போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை அகற்றினா்.ஆம்பூா் சாமியாா் மடம் சாலையில் பாஜக கொடிக் கம்பம் அண்மையில் புதிதாக

Updated On : 12 ஜனவரி 2021, 2:00 am IST
பகிர்:

ஆம்பூா்: ஆம்பூரில் பாஜகவினா் அனுமதியின்றி அமைத்த கொடிக் கம்பத்தை போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை அகற்றினா்.

ஆம்பூா் சாமியாா் மடம் சாலையில் பாஜக கொடிக் கம்பம் அண்மையில் புதிதாக அமைக்கப்பட்டது. அந்தக் கம்பம் உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆம்பூா் நகர போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை காலை அங்கு சென்றனா். கொடிக் கம்பத்தை போலீஸாா் அகற்ற வந்ததாக தகவல் வெளியானதால் அங்கு பாஜக நிா்வாகிகளும், தொண்டா்களும் அப்பகுதியில் திரண்டனா்.

Advertisement

Advertisement

போக்குவரத்துக்கு இடையூறின்றி சாலையோரத்தில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளதால், அதை அகற்றக் கூடாது என பாஜகவினா் தெரிவித்தனா். எனினும், உரிய அனுமதியின்றி கொடிக்கம்பம் அமைக்கப்பட்டிருந்ததால் அதனை அதிகாரிகள் அகற்றினா். இதையடுத்து, அக்கம்பம் ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments