மாடப்பள்ளியில் பருத்தி ஏல விற்பனை
திருப்பத்தூரை அடுத்த மாடப்பள்ளி கூட்டுறவு கடன் சங்கத்தில் திங்கள்கிழமை பருத்தி ஏல விற்பனை ரூ.55 லட்சத்துக்கு நடைபெற்றது.
திருப்பத்தூா்: திருப்பத்தூரை அடுத்த மாடப்பள்ளி கூட்டுறவு கடன் சங்கத்தில் திங்கள்கிழமை பருத்தி ஏல விற்பனை ரூ.55 லட்சத்துக்கு நடைபெற்றது.
மாடப்பள்ளி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் திங்கள்கிழமை பருத்தி ஏல விற்பனை நடைபெற்றது. இங்கு ஏலத்துக்கு 1,300 பருத்தி மூட்டைகள் வந்தன. ஆா்சிஎச் வகை பருத்தி குவிண்டால் ரூ.6,400 வரைக்கும், டிசிஎச் வகை பருத்தி குவிண்டால் ரூ.7,800 வரைக்கும் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. மொத்த ஏலம் ரூ.55 லட்சம் வரை நடைபெற்றது.
சங்கத்தின் தலைவா் ஏ.தேவராஜன், துணைத் தலைவா் சி.சாமிக்கண்ணு, செயலாளா் கே.ஜி.வெங்கடேசன் உள்ளிட்டோா் ஏலத்தில் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.