முகப்பு
திருவள்ளூர்

ஆக்கிரமிப்பை அகற்றச் சென்ற அதிகாரிகளை முற்றுகையிட்டுப் போராட்டம்

திருவள்ளூர் அருகே மேம்பாலப் பணிக்காக ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற அதிகாரிகளை பொதுமக்கள்

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 11:24 am IST
பகிர்:

திருவள்ளூர் அருகே மேம்பாலப் பணிக்காக ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

÷திருநின்றவூரை அடுத்த நெமிலிச்சேரி அருகே மீஞ்சூர்- வண்டலூர் இடையே வெளிவட்டச் சாலை மேம்பாலப் பணி நடைபெற்று வருகிறது.

÷இந்த மேம்பாலத்தின் இருபுறங்களிலும் "சர்வீஸ்' சாலை அமைப்பதற்காக அங்குள்ள 16 வீடுகளை அகற்ற சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் அப்பகுதி மக்களுக்கு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

÷இதையடுத்து அப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்பொருட்டு புதன்கிழமை அங்கு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர்.÷அப்போது அப்பகுதி மக்கள் அவர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.÷தகவலறிந்த  சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும நில எடுப்பு டி.ஆர்.ஓ. மோகனசுந்தரம், திருவள்ளூர் ஆர்.டி.ஓ. அபிராமி உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

÷அப்போது ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை சில நாள்கள் ஒத்திவைப்பதாகவும், எனவே சில தினங்களில் இங்கிருந்து மாற்று இடத்துக்குச் செல்ல வேண்டும் என அவர்களை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

÷இச்சம்பவத்தால் நெமிலிச்சேரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments