முகப்பு
செய்திகள்

விரைவில் நடிகர் விஜய் சேதுபதியின் டிரெயின் டீசர்!

இயக்குநர் மிஷ்கின் இயக்கிய டிரெயின் படத்தின் டீசர் குறித்து...

Updated On : 30 ஜூன் 2026, 4:52 pm IST
நடிகர்கள் விஜய் சேதுபதி, நாசர்.
பகிர்:

நடிகர் விஜய் சேதுபதி நடித்த டிரெயின் திரைப்படத்தின் டீசர் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்த திரைப்படம் டிரெயின். முழுப்படம் ஓடும் ரயிலில் நடப்பது போல் எடுக்கப்பட்ட இப்படத்தில், நடிகர்கள் நாசர், ஷ்ருதி ஹாசன், யுகி சேது, நரேன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

மிஷ்கின் இசையமைத்துள்ள இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். நீண்ட நாள்களாக இப்படம் வெளியீட்டைக் காணாமல் இருக்கிறது. சில நிதி பிரச்னைகளே காரணம் என்றும் கூறப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், டிரெயின் திரைப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளதாகப் படத்தின் இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, மிஷ்கின் இயக்கிய பிசாசு - 2 திரைப்படமும் திரைக்கு வராமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

An update has been released regarding the teaser of the movie Train, starring actor Vijay Sethupathi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments