FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விஜய் சேதுபதியின் டிரெயின் பட வெளியீட்டுத் தேதி!

விஜய் சேதுபதி நடித்துள்ள டிரெயின் பட வெளியீட்டுத் தேதி குறித்து...

12 அக்டோபர் 2026, 6:57 pm IST
டிரெயின் - படம் - எக்ஸ்
பகிர்:

விஜய் சேதுபதி நடித்துள்ள டிரெயின் பட வெளியீட்டுத் தேதி இன்று (அக். 12) அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள திரைப்படம் டிரெயின்.

த்ரில்லர் பாணியில் முழுவதும் ரயிலில் நடப்பது போல் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், நடிகர்கள் நாசர், ஷ்ருதி ஹாசன், யுகி சேது, நரேன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

மிஷ்கின் இசையமைத்துள்ள இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். நீண்ட நாள்களாக வெளியாகாமல் இருந்த இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில், படம் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அண்மையில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பத்தா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், டிரெயின் திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிரெயின் பட வெளியீட்டுத் தேதி
summary

The release date for the film Train, starring Vijay Sethupathi, was announced today (Oct. 12).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments