எம்மி விருது வழங்கி அசத்திய விஜய் சேதுபதி!
முதல் இந்திய நடிகராக எம்மி விருதுகள் நிகழ்வில் விஜய் சேதுபதி...

நடிகர் விஜய் சேதுபதி எம்மி விருதுகள் நிகழ்வில் விருது கொடுத்த முதல் இந்திய நடிகர் என்கிற கௌரவத்தைப் பெற்றுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான சிறந்த விருதான சர்வதேச எம்மி விருதுகள் ஆண்டுதோறும் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தாண்டிற்கான 54 ஆவது சர்வதேச எம்மி விருதுகள் விழா இந்திய நேரபடி இன்று நடைபெற்றது. இதில், எம்மி விருதுகள் வரலாற்றில் முதல் இந்திய நடிகராக விஜய் சேதுபதி கலந்துகொண்டு விருது வழங்கியுள்ளார்.
Advertisement
Advertisement
தொலைக்காட்சித் தொடர்களுக்கான விருதுகள் என்றாலும் பாலிவுட் மற்றும் இதர இந்திய நட்சத்திரங்கள் யாரும் இதுவரை பங்கேற்காத விருது விழாவில் பங்கேற்று வெற்றியாளருக்கு விருதை வழங்கி விஜய் சேதுபதி புதிய சாதனையைப் படைத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள், விடியோகள் வெளியாகி சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.