முகப்பு

தமிழக அரசியல்... நாகரிகமற்ற தன்மை... விளாசிய விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி அரசியல் குறித்து பேசியுள்ளார்...

13 வினாடிகள் முன்பு
தமிழக அரசியல்... நாகரிகமற்ற தன்மை... விளாசிய விஜய் சேதுபதி!
நடிகர் விஜய் சேதுபதி
பகிர்:

நடிகர் விஜய் சேதுபதி அரசியல் குறித்து கேள்விகளுக்கு அதிரடியான பதிலைக் கொடுத்துள்ளார்.

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த டிரெயின் திரைப்படம் டிச. 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் கதை முழுவதும் இரயிலில் நடப்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்திற்கான நேர்காணலில் கலந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதியிடம், ”முதல்வர் விஜய்யுடன் இணைந்து பணியாற்றியுள்ளீர்கள். அவரின் ஆட்சி எப்படி இருக்கிறது? உங்களுக்கு அரசியல் ஆசை இருக்கிறதா?எனக் கேட்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதற்கு விஜய் சேதுபதி, “விஜய் சாருடன் நான் பணியாற்றியுள்ளேன். ஆனால், அரசியல் என்பது அவர்கள் போடும் திட்டங்கள் அது சார்ந்த விஷயங்களால் நிறைந்தது. அதை பார்த்துக் கொண்டிருப்பது என் வேலை இல்லை. அரசியலுக்கு வருவது என்பது ஆசை இல்லை; அது சேவை. நாங்கள் நடத்தும் அமைப்பின் மூலம் இதுவரை 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். ஒரு குளத்தைத் தூர்வாரியிருக்கிறோம். பல பேரை படிக்க வைக்கிறேன். இன்னும் சிலவற்றை செய்துகொண்டிருக்கிறோம். இதுவே அரசியல்தான்.

நடிகர் விஜய் சேதுபதி

நான் சம்பாதிக்கிற பணத்தைக் கொண்டு இதைச் செய்வதால் சந்தோஷமாகவும் இருக்கிறேன். எங்களுக்கு அரசியல் கருத்தைப் பேசுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், எந்த ஆட்சியாக இருந்தாலும் அதனை நாகரீகமாக ஏற்றுக்கொள்வதில்லை. மேலும், கூர்ந்து கவனிக்காத ஒன்றை குறித்து பேசுவது அறைவேக்காட்டுத்தனம். நாங்கள் சொன்ன விஷயங்களின் மீது சமூக வலைதளங்களால் வருகிற விமர்சனங்கள் எங்கள் படத்தைப் பாதிக்கக் கூடாது” எனக் காட்டமாக பதிலளித்துள்ளார்.

Actor Vijay Sethupathi has given sharp, hard-hitting responses to questions regarding politics.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.