முகப்பு
திருவள்ளூர்

டெங்கு காய்ச்சல்: இரு பெண்கள் பாதிப்பு

திருத்தணி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேலஞ்சேரியில் டெங்கு காய்ச்சலால் சகோதரிகள் இருவர் பாதிக்கப்பட்டு

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 11:23 am IST
பகிர்:

திருத்தணி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேலஞ்சேரியில் டெங்கு காய்ச்சலால் சகோதரிகள் இருவர் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

÷திருத்தணி ஒன்றியத்துக்கு உட்பட்டது வேலஞ்சேரி காலனி கிராமம். இங்கு 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

÷இப்பகுதியில் வசிக்கும் வெங்கடேசன் - லலிதா தம்பதியினருக்கு நிவேதா (9), வர்ஷா (8) என்ற இரு மகள்கள் உள்ளனர்.

Advertisement

Advertisement

÷இவர்கள் இருவரும் அக்கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மூன்று மற்றும் நான்காம் வகுப்பு படித்து வருகின்றனர்.

÷இந்நிலையில் கடந்த 17-ம் தேதி, நிவேதா மற்றும் வர்ஷா ஆகிய இருவருக்கும் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

÷இதையடுத்து அவர்கள் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினர்.

÷ஆனால் அதன் பின்னர் காய்ச்சல் தீவிரமடைந்ததால், அவர்கள் கடந்த 19-ம் தேதி திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

÷பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

÷அங்கு அவர்களைப் பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

÷அவர்களுக்கு அங்கு தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments