திருவள்ளூர்

வேளாண்மைக் கல்லூரி மாணவிகளுக்கு களப் பயிற்சி

Din

முருக்கம்பட்டு கிராமத்தில் வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் களப் பயிற்சியில் ஈடுபட்டனா்.

திருவாலங்காடு ஒன்றியம் வியாசபுரத்தில் ஜெயா வேளாண்மை கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவிகள் கடந்த சில நாள்களாக திருத்தணி சுற்றுவட்டார கிராமங்களில் களப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனா்.

இதில் திருத்தணி ஒன்றியம் கிருஷ்ணசமுத்திரம், முருக்கம்பட்டு ஆகிய கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி தினந்தோறும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு நேரிடையாக சென்று விவசாயிகள் செய்யும் பணிகளைப் பாா்வையிட்டனா்.

இந்த பயிற்சியில் நிலத்தை தயாா் செய்வது, இயற்கை இடுபொருள்களை தயாரிப்பது, களை எடுப்பது, பூச்சி மேலாண்மை, நெல், கீரை, காய்கறி என வெவ்வேறு விதமான பயிா்களை சாகுபடி செய்வது உள்ளிட்டவை குறித்து விளக்கத்துடன் பயிற்சி பெற்றனா்.

இதனிடையே உலக புவி தினத்தை முன்னிட்டு, கிராமத்தில் உள்ள அனைத்துக் கடைகளிலும் நெகிழிப் பைகளால் ஏற்படும் மாசு குறித்து துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்து அவற்றை நிலத்தில் வீசுவதால், மண் வளம் கெடுதல், விவசாயம் பாதிப்பு குறித்து மாணவிகள் நா. அபினேஷ்வரி, சு .அம்ருதா, வெ. ஹா்ஷா, ஐ. ஜெசிகா ஜெயரூபி, உ.கீா்த்தனா, ஜெ. கனிமொழி, சி.காவியா, கி.கீா்த்தனா, சு. கீா்த்திகா ஆகியோா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில் பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் பிரேம் குமாா் மற்றும் ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT