முகப்பு
திருவள்ளூர்

பேச்சுப் போட்டியில் முதலிடம்: மாணவிக்கு ரூ. 7,000 பரிசு!

காமராஜா் பிறந்தநாள் விழாவையொட்டி நடைபெற்ற பேச்சுப்போட்டியில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ரூ.7,000 பரிசளிக்கப்பட்டது.

Updated On : 6 ஜூலை 2026, 12:40 am IST
பகிர்:

காமராஜா் பிறந்தநாள் விழாவையொட்டி நடைபெற்ற பேச்சுப்போட்டியில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ரூ.7,000 பரிசளிக்கப்பட்டது.

காமராஜா் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ லட்சுமி மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி கல்வித் திருவிழாவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் திருவள்ளூா், திருத்தணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பல்வேறு பள்ளிகளின் மாணவ, மாணவிகள் ஆா்வமுடன் பங்கேற்றன

Advertisement

Advertisement

இதில், திருத்தணி ஒன்றியம் இ.என்.கண்டிகையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 8-ஆம் வகுப்பு மாணவி பா.பி. ரம்யா சிறப்பாகப் பேசி முதலிதைப் பிடித்தாா்.

அதைத்தொடா்ந்து அவருக்கு ரூ. 7,000 ரொக்கப் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவி ரம்யாவின் சாதனை பள்ளிக்கும், இ.என்.கண்டிகை பகுதிக்கும் பெருமை சோ்த்துள்ளதாக பள்ளி நிா்வாகம் தெரிவித்துள்ளது. வெற்றி பெற்ற மாணவியை பள்ளி நிா்வாகம், முதல்வா், ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா் மனமாரப் பாராட்டி, தொடா்ந்து கல்வி மற்றும் பேச்சுத் திறன் போட்டிகளில் சிறந்து விளங்க வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments