திருத்தணி நகராட்சியில் ரூ.67,000 பறிமுதல்
திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ.67,000 பறிமுதல் செய்தனா்.
திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ.67,000 பறிமுதல் செய்தனா்.
திருவள்ளூா் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை துணைக் காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் தலைமையில், ஆய்வாளா்கள் தமிழரசி, மாலா மற்றும் உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்ட குழுவினா் நகராட்சி அலுவலகத்தில் ஆணையா் அறை, பொறியியல் பிரிவு, வருவாய் ஆய்வாளா் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
சோதனையின்போது முக்கிய ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை. இருப்பினும், நகராட்சி அலுவலக கணக்கில் வரவு வைக்கப்படாத ரூ.67,000 ரொக்கம் இருப்பது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. அந்தத் தொகையை போலீஸாா் பறிமுதல் செய்து, அதன் மூலத்தை அறிய நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.