முகப்பு
திருவாரூர்

"ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் அதிக லாபம் பெறலாம்'

வேளாண்மையில் ஒருங்கிணைந்த பண்ணைய சாகுபடி முறைகளை கையாண்டு, விவசாயிகள் அதிக லாபம் அடைய

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 1:17 pm IST
பகிர்:

வேளாண்மையில் ஒருங்கிணைந்த பண்ணைய சாகுபடி முறைகளை கையாண்டு, விவசாயிகள் அதிக லாபம் அடைய வேண்டும் என்றார் ஆட்சியர் சி. நடராசன்.

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் வளம் குன்றா வாழ்விற்கு ஒருங்கிணைந்த பண்ணையம் என்றத் தலைப்பிலான பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் நபார்டு வங்கி உதவியுடன் இந்த முகாம் நடத்தப்பட்டது.முகாமுக்கு தலைமை வகித்து, விவசாயிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியர் மேலும் பேசியது:

மாவட்டத்தில் நீடித்த நிலையான நவீன கரும்பு சாகுபடி என்பது 20 ஹெக்டேரிலும், சாதாரண கரும்பு சாகுபடி ஒரு ஆயிரத்து 500 ஹெக்டேரிலும் நடப்பாண்டில் சாகுபடி செய்யப்படவுள்ளது என்றார் ஆட்சியர்.

Advertisement

Advertisement

முகாமில் திருஆரூரான் சர்க்கரை ஆலை முதுநிலை மேலாளர் டி. லோகநாதன், நபார்டு மாவட்ட வளர்ச்சி மேலாளர் என். ரவிசங்கர், இணைப் பதிவாளர் (கூட்டுறவு) கே.சி. ரவிச்சந்திரன், வேளாண்மை இணை இயக்குநர் கணேசன், துணை இயக்குநர் க. மயில்வாகணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில், விவசாயிகளுக்கான கரும்பு சாகுபடி மானியமாக 9 பேருக்கு கூடுதல் தொகை ஒரு லட்சத்து 10ஆயிரத்து 200-ம், மீன் பண்ணை அமைக்க 2 பேருக்கு தலா 10 ஆயிரத்து 200 ரூபாய்க்கான மீன் குஞ்சுகள், வலைகளை ஆட்சியர் வழங்கினார்.

வேளாண் அறிவியல் நிலையப் பேராசிரியர் மற்றும் தலைவர் க. சோழன் வரவேற்றார். உதவிப் பேராசிரியர் முனைவர் எஸ். அன்புமணி அறிமுகவுரையாற்றினார். நிறைவில் உதவிப் பேராசிரியர் முனைவர் தங்க. தாமோதரன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments