வாட்ஸ்ஆப்பில் புதிய வசதி! மொபைல் எண் தெரியாமலேயே 'மெசேஜ்' செய்யலாம்!
வாட்ஸ்ஆப்பில் புது அப்டேட் பற்றி...
வாட்ஸ்ஆப்பில் 'யூசர் நேம்' எனும் பயனாளர் பெயர் இடம்பெறும் புதிய வசதி அறிமுகமாகிறது. இதன் மூலமாக உங்களுடைய மொபைல் எண் தெரியாமலேயே நீங்கள் மற்றவருக்கு மெசேஜ் செய்யலாம்.
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பயனர்களால் வாட்ஸ்ஆப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் பயனர்களின் வசதிக்கேற்ப அவ்வப்போது வாட்ஸ்ஆப்பிலும் புதுப்புது அப்டேட் வந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில் வாட்ஸ்ஆப்பில் 'யூசர் நேம்'(User name) எனும் பயனாளர் பெயர் இடம்பெறும் புதிய வசதி அறிமுகமாகிறது.
Advertisement
Advertisement
அதாவது வாட்ஸ்ஆப்பில் ஏதேனும் ஒரு குரூப் அல்லது கம்யூனிட்டி குரூப்பில் இருந்தால் அந்த குழுவில் இருக்கும் அனைவருக்கும் மற்றவருடைய மொபைல் எண் தெரியும். இதற்கு பயனர்கள் பலரும் ஆட்சேபனை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் வாட்ஸ்ஆப்பில் 'யூசர் நேம்' வைத்துக்கொள்ளும் வசதி அறிமுகமாகிறது. இதன்படி வாட்ஸ்ஆப் கணக்கு வைத்திருப்பவர்கள், தங்களுக்கென ஒரு 'பயனர் பெயரை' வைத்துக்கொள்ளலாம்.
இதன் மூலமாக, நீங்கள் வாட்ஸ்ஆப் குழுவில் இருக்கும்போது மற்றவருக்கு உங்களுடைய மொபைல் எண் தெரியாது, மாறாக உங்களுடைய 'யூசர் நேம்' மட்டும் தெரியும். அதேபோல புதிதாக யாருக்கேனும் மெசேஜ் செய்தாலும் உங்களுடைய மொபைல் எண் இன்றி உங்களுடைய பெயர் மட்டும் தெரியும்.
இதற்கு வாட்ஸ்ஆப்பில் Settings > Account > Username சென்று 'யூசர் நேம்' வைத்துக்கொள்ளலாம்.
WhatsApp to let people chat without swapping phone numbers
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.