FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மின்தடையா? இனி வாட்ஸ் ஆப் செயலியிலும் புகார் அளிக்கலாம்!

மின்சார சேவைகள் தொடர்பாக புகார் அளிக்க வாட்ஸ் ஆப் எண் குறித்து...

மின்சார சேவைகள் புகாரளிக்க வாட்ஸ் ஆப் எண் அறிவிப்பு
பகிர்:

மின்சார சேவைகள் தொடர்பாக புகார் அளிக்க வாட்ஸ் ஆப் எண்ணை அரசு வெளியிட்டுள்ளது.

மாநிலத்தில் சமீபத்தில் பல்வேறு இடங்களில் மின்வெட்டு ஏற்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. சில சமயங்களில் மின்வெட்டைக் கண்டித்து சாலை மறியலும் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, மின்வெட்டு குறித்து தவெக அரசின் மீது எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மாநிலத்தில் மின் சேவைகள் குறித்து புகார்கள் தெரிவித்து, தீர்வுகாண வாட்ஸ் ஆப் எண்ணை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

தமிழ்நாடு அரசு மின்சார வாரியத்தின் 94987 94987 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு Hi என மெசேஜ் அனுப்பி, மின்சேவைகள் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கலாம். தானியங்கி முறையில் புகார்களைத் தெரிவித்து, புகார்கள் மீது தீர்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

WhatsApp number to lodge complaints regarding electricity services

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments