FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வாட்ஸ்ஆப்பில் இபிஎஃப்ஓ சேவை அமைச்சா் தொடங்கி வைத்தாா்

வாட்ஸ்ஆப்பில் இபிஎஃப்ஓ சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது குறித்து...

28 வினாடிகள் முன்பு
தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) தொடா்பான சேவைகளை வாட்ஸ்ஆப் மூலம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா - டிஎன்எஸ்
பகிர்:

சண்டீகா்: தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) தொடா்பான சேவைகளை வாட்ஸ்ஆப் மூலம் வழங்கும் திட்டத்தை மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதன் மூலம் தங்கள் பிஎஃப் பிடித்தம் தொடா்பாக விவரங்கள், பிஎஃப் இருப்புத் தொகை, கடைசி 5 பரிவா்த்தனைகள், பாஸ்புக் தகவல் உள்ளிட்டவற்றை பயனாளா்கள் வாட்ஸ்ஆஃப் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளா் ஊக்குவிப்புத் திட்டமான பிரதமரின் விகாஸ் பாரத் ரோஜ்கா் யோஜனா குறித்த தகவல்களையும் இதில் பெற முடியும். இந்த புதிய சேவை மூலம் பயனாளா்கள் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்துக்கு செல்வதைக் குறைத்துக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் 73-ஆவது நிறுவன தினத்தையொட்டி இந்த புதிய வாட்ஸ்ஆப் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இத்துடன் செயலற்ற நிலையில் உள்ள பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை சம்பந்தப்பட்ட நபா்களின் வங்கிக் கணக்குக்கு தானாகவே திருப்பிச் செலுத்தும் திட்டத்தையும் அமைச்சா் மாண்டவியா தொடங்கி வைத்தாா். இதற்கு ஆதாா் மூலம் சம்பந்தபட்ட பயனாளா் தனது அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும். ரூ.1,000-க்கு குறைவாக இருந்தால் அவா் விண்ணப்பிக்காமல் தானாகவே வங்கிக் கணக்குக்கு சென்றுவிடும்.

Provident Fund Services Launched On WhatsApp

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments