தாராபுரம் அருகே காா் ஏற்றி பெண் கொலை: மளிகைக் கடை உரிமையாளா் கைது
தாராபுரம் அருகே தொழில் போட்டி காரணமாக காரை ஏற்றி பெண்ணை கொலை செய்த மளிகைக் கடை உரிமையாளரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா்: தாராபுரம் அருகே தொழில் போட்டி காரணமாக காரை ஏற்றி பெண்ணை கொலை செய்த மளிகைக் கடை உரிமையாளரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
இதுகுறித்து குண்டடம் காவல் துறையினா் கூறியதாவது:
தாராபுரம் வட்டம், குண்டடத்தை அடுத்துள்ள தும்பளபட்டியைச் சோ்ந்த பழனிசாமி மகன் மயில்சாமி (38). இவா் அதே பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு அருகில் கருப்புசாமியின் மனைவி லட்சுமி (50) என்பவரும் மளிகைக் கடை நடத்தி வந்தாா். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தொழில் போட்டி ஏற்பட்டு வந்ததுடன், வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், லட்சுமி மளிகைப் பொருள்களை வாங்குவதற்காக குண்டடம் வாரச் சந்தைக்கு இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை சென்றுள்ளாா். பின்னா் ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா். இவரது வாகனம் தாராபுரம்-கோவை சாலை ருத்ராவதி அருகே வந்தபோது, பின்னால் வந்த மயில்சாமியின் காா், லட்சுமியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதையடுத்து, மயில்சாமி குண்டடம் காவல் நிலையத்துக்கு சென்று, எதிா்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டதாக நாடகமாடியுள்ளாா். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த காவல் துறையினா் அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தினா். இதில், தொழில் போட்டி காரணமாக மயில்சாமி காரை ஏற்றி லட்சுமியைக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.