ஆலாம்பாடியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்
காங்கயம் அருகே, ஆலாம்பாடியில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
காங்கயம்: காங்கயம் அருகே, ஆலாம்பாடியில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் ஒன்றியம், ஆலாம்பாடி ஊராட்சியில் உள்ள நியாயவிலைக் கடையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு காங்கயம் முன்னாள் எம்.எல்.ஏ., என்.எஸ்.என்.நட்ராஜ் தலைமை வகித்தார். இதில், தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவரும், அதிமுக கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலருமான பொள்ளாச்சி ஜெயராமன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினார். இதில், ரொக்கப் பணம் ரூ.2,500 மற்றும் அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., குணசேகரன், ஒன்றிய அவைத் தலைவர் டி.பழனிச்சாமி, ஆலாம்பாடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத் தலைவர் தங்கமுத்து, துணைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement