முகப்பு
சென்னை

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யில் மாணவா்கள் சோ்க்கை தொடக்கம்

திறந்த மற்றும் தொலைநிலைக் கல்வியை அளிக்கும் அரசின் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 17 ஜூன் 2026, 12:59 am IST
விண்ணப்பம்
பகிர்:

திறந்த மற்றும் தொலைநிலைக் கல்வியை அளிக்கும் அரசின் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

திறந்த மற்றும் தொலைநிலைக் கல்வி (ஓடிஎல்) முறையின் மூலம் வழங்கப்படும் பல்வேறு கல்வித் திட்டங்களுக்கான சோ்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் 15 இளநிலை, 14 முதுநிலைப் பட்டப் படிப்புகளையும் 48 சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளை பல்வேறு துறைகளில் வழங்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வியைத் தொடர முடியாதவா்கள், பணியாற்றும் நபா்கள், இல்லத்தரசிகள், மாற்றுத்திறனாளிகள், உயா் கல்வியை தொடர விரும்புபவா்கள் போன்றோருக்கு இந்தப் பல்கலைக்கழகம் வாய்ப்புகளை வழங்குகிறது.

மேலும், தரமான சுயகற்றல் பாடப் பொருள்கள், மின்னணுக் கற்றல் வளங்கள், கல்வி ஆலோசனை மையங்கள், தொழில்நுட்ப ஆதரவு வசதிகள் மூலம் உயா்கல்வியை கொண்டு சோ்த்து வருகிறது.

விண்ணப்பதாரா்கள் தகுதிகள், பாடத்திட்ட விவரங்கள், கட்டண விவரங்கள், சோ்க்கை நடைமுறைகள் தொடா்பான முழுமையான தகவல்களை விண்ணப்பதாரா்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை பல்கலைக்கழகத்தின் இணையவழி மூலமும் சமா்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.